நீண்ட ஒரு பதிவு, என் மீதான அவதூறுகளுக்காக உண்மையை விளக்கி எழுதவேண்டிய தேவை இருந்தது ஆதலால் இந்த பதிவு. முகிலன் காணாமல் போவதற்கு முன்பே நான் குறிப்பிட்ட சிலரிடம் முகிலனுக்கும் எனக்குமான ஒரு தனிப்பட்ட விசயம் குறித்து கூறியிருந்தேன், அதில் சிலர் முகிலனை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது இதுவரை இந்தம்மாவுக்கு தெரியாதா? அல்லது தெரிந்து கொண்டு தெரியாத மாதிரி என் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி பேட்டியளிக்கிறாங்களான்னு எனக்கு தெரியல. எனக்கும் முகிலனுக்குமான தனிப்பட்ட பிரச்சனை குறித்து முகிலன் காணாமல் போன பிப்ரவரி 15 க்கு சில நாட்களுக்கு முன்னரே நான் சிலரிடம் தெரிவித்திருந்ததில் பத்திரிக்கை நண்பர்களும் அதில் இருக்காங்க, அவர்களுக்கு நட்பு ரீதியில் இந்த விசயம் தெரியும், ஏன் உங்க வீட்டிலிருக்கும் ஒருவருக்கே இந்த விசயம் தெரியுமே, இது குறித்த பேச்சுவார்த்தைக்கு பிப்ரவரி 17 ஞாயிறு வருகிறேன் என்று உங்க கூட தற்போது செயல்படும் ஒருவருக்குத் தான் முகிலன் மெசேஜ் அனுப்பியிருந்தாரே அதை அந்த பெரிய மனுஷன் உங்க கிட்ட சொல்லலையா? அது பற்றி உங்களுக்கு தெரியாதாம்மா பூங்கொடி அவர்களே? முகிலன் திரும்ப வரவேண்டும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன், எப்போ வந்தாலும் பஞ்சாயத்து இருக்கு அவருடன்... பத்திரிக்கையாளர்கள் பலர் என்னிடம் பேட்டி கேட்டும் இதுவரை யாருக்கும் பேட்டி தராமல் தான் இருக்கேன், ஆனால் இது மாதிரியான செயல்பாடுகள் என்னை பேச வைக்கிறது. முகிலன் மீதான தவறை மறைக்க ஒருவரைப்பற்றி தெரியாமல் அவங்களை தவறாக சித்தரிக்கும் முயற்சியில் ஈடுபடாதீங்க. இந்த செய்தி வந்திருக்கும் TOI ரிப்போர்ட்டரிடம் கூட நான் இப்போது எந்த பேட்டியும் தரலை சார், நான் நிச்சயம் எனக்கான பிரச்சனைகளை பேசுவேன் அப்போது பேட்டியளிக்கறேன்னு தான் அவரிடம் சொல்லியிருந்தேன். முகிலன் காணாமல் போவதற்கு முன்பு ஸ்டெர்லைட் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு பொன்னரசனை முகிலன் எதற்கு அழைத்தாரென்று உங்களுக்கு தெரியுமா? முகிலன் பேச்சுவார்த்தைக்கு வராத காரணத்தால் நான் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வந்து அவரைப்பற்றி அனைத்தையும் சொல்வேன் என்று கூறியிருந்தேன். உங்களோடு தற்போது இணைந்து செயல்படுபவர்கள் சிலர் இதை முகிலனிடம் சொல்லியிருக்காங்க, ஆதலால் முகிலன் பொன்னரசன் அவரை வரவழைத்து நான் வந்தால் தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்திருந்தார், என்னை தடுக்க அடியாள் செட் பண்ணியிருக்காருன்னு தானே இதற்கு அர்த்தம்? இது உங்களுக்கு தெரியுமா? நான் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வருவேன் என்று சொல்லிய பிறகு தான் அவர் ஞாயிறு என்னை சந்திக்க வருவதாக ஒருவருக்கு மெசேஜ் அனுப்பினார் அது உங்களுக்கு தெரியுமா? அந்த நபர் அந்த மெசேஜை எனக்கு அனுப்பினார் அதனால் தான் நான் அன்று சென்னை செல்லவில்லை. தமிழக அரசுடன் இணைந்து நான் முகிலன் பேருக்கு களங்கம் விளைவிக்கிறேன்னு சொல்றதோட ஏன் நிறுத்துனீங்க? ஸ்டெர்லைட் ஆலை, மணல் மாஃபியா, காவல்துறைன்னு இவர்களோடும் சேர்ந்து களங்கம் விளைவிக்கிறேன்னு சொல்ல வேண்டியது தானே? அதான் சில ஆர்வக் கோளாறுகள் சொல்லிட்டு திரியுதுங்களே அது போல, நீங்க என்மீது சுமத்துகின்ற இது போன்ற குற்றச்சாட்டுகளை முகிலனே நம்பமாட்டாரு, நீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் என்மீது வைக்கும் குற்றச்சாட்டு உண்மையாக இருந்திருந்தால் கார்ப்பரேட்களையும், காவல்துறையும் தைரியமாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் எதிர்த்து பேசிய முகிலன் பத்திரிகையாளர் சந்திப்பில் வந்து நான் அவரைப்பற்றி சொல்லுவேன்னு சொன்ன போதே இசை ஸ்டெர்லைட்காரனிடம் காசு வாங்கிட்டு என்மீது அவதூறு பரப்புறாங்கன்னு சொல்லிருக்க மாட்டாரா? அதை தவிர்த்து என்னை வெளியிலேயே தடுத்து நிறுத்த பொன்னரசனை வரவழைத்திருப்பாரா சொல்லுங்க? பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்த அன்று வழக்கறிஞருக்கு அழைத்து நான் சென்னை வந்திருக்கேனா, குளித்தலையில் இருக்கேனானு ஏன் உறுதிபடுத்திக் கொண்டார்? உங்க மகன் கூட நம்பமாட்டான் நீங்க எல்லாம் சொல்கின்ற குற்றச்சாட்டை, அவனை கூப்பிட்டு கேளுங்க என்னைப்பற்றி... முகிலன் பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் போது அவருக்கு வழக்கு பார்த்த வழக்கறிஞர் அவரிடம் கேளுங்க தெரியும் என்னைப்பற்றி, கையில் சாப்பிடுவதற்கு இருந்த காசை கூட முகிலனுக்கு கொடுத்துட்டு பசியோடு திரும்புவேன், அந்த வழக்கறிஞர் தான் சாப்பாடு வாங்கி தந்து என்னை ஊருக்கு அனுப்புவார்... இப்படிப்பட்ட என்னை குறை கூறும் மனிதர்கள் எல்லாம் என்ன மாதிரியான ஆட்கள்? முகிலன் திரும்ப வந்த பிறகு நீங்க எல்லாம் சொல்வதைப்போல் என் மீது ஒரு குற்றச்சாட்டை முகிலன் வைத்தாரென்றால் அவர் முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்து சொல்கிறார் என்று தான் அர்த்தமாகும். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இசை மீது இந்த குற்றச்சாட்டை வைக்கறீங்கன்னு கேட்டதற்கு, இசை மீது ஒரு யூகத்தின் அடிப்படையில் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைப்பதாக சொல்லியிருக்கீங்க பத்திரிக்கையாளரிடம், இதே போல் ஏற்கனவே வேறு ஒரு பெண் வைத்த குற்றச்சாட்டிற்கு என்ன பதில் சொல்வீங்க? மற்றும் வேறு ஒரு இடத்தில் முகிலன் பற்றி சில விசயங்கள் சொல்லிருக்காங்க அதற்கு உங்களின் பதில் என்ன? உங்களிடம் என்னுடைய பிரச்சனையை சொல்ல வேண்டாமென்று கேட்டுக்கொண்டது உங்களுடைய மகன் அது தெரியுமா உங்களுக்கு? அந்த பையன் நீங்க வருத்தப்படக்கூடாது என்ற பாசத்தில் உங்க கிட்ட இருந்து இதை மறைத்தான், உங்க வீட்டிற்கு நான் போறேன்னு சொன்ன போது முகிலனை வரச்சொல்லி பேசலாம்மா அப்புறம் எந்த முடிவும் எடுத்துக்கோன்னு சொன்னது அந்த பஞ்சாயத்து பேசறேன்னு சொன்னவங்க தான். அதன் பிறகு அதில் ஒருவர் இந்த பஞ்சாயத்தில் இருந்து முகிலனை காப்பாற்ற நலுவியது வேறு கதை. அவர் காணாமல் போன பிறகு உங்களை சந்திக்கிறேன்னு சொன்ன போது உங்க ஊரைச் சேர்ந்தவரும் உங்க சொந்தக்காரருமான ஒரு தோழர் தான் வேண்டாம் ரெண்டு பேரும் சந்தித்து பிரச்சனை எதற்குன்னு சொன்னாரு... முகிலன் எனது வாழ்க்கைக்கான வாக்குறுதியையும், நம்பிக்கையையும் அளித்துவிட்டு எஸ்கேப் ஆகப்பார்த்தது தான் இந்த பஞ்சாயத்திற்கே காரணம். தேவைக்கு பய